சிறந்த நிகழ்ச்சிகள் பட்டியலில் பல வாசகர்கள் பல்வேறு கருத்துக்களை அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் பொதுவாக சில அம்சங்கள் தெரிய வந்துள்ளன.
அதாவது நடனப் போட்டி நிகழ்ச்சிகளும், நகைச்சுவை நிகழ்ச்சிகளும்தான் பொதுமக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, பிரபலங்களை அழைத்து நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியும் இடம்பிடித்துள்ளது.
பெரும்பாலும் தொடர்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டு புதுமையான நிகழ்ச்சிகள் முன்னணி வகிக்கின்றன.
இவை ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் நல்ல மாற்றம்தான்.
தொடர்ந்து உங்களது கருத்துக்களை அனுப்பவும்.