மிக அதிக மக்களால் பார்க்கப்பட்ட தொடர் என்ற புகழைப் பெற்ற மகாபாரதம் (டிடியில் ஒளிபரப்பானது) தொடரை தயாரித்த பி.ஆர். சோப்ரா மரணமடைந்தார்.
இந்தி சினிமா உலகின் பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன பி.ஆர்.சோப்ரா மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
கடந்த சில காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த அவரது உயிர் நேற்று காலை பிரிந்தது. அவருக்கு ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
பெரும் பொருட்செலவில் இந்தியில் தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பரபரப்பாக ஒளிபரப்பாகிய `மகாபாரதம்' தொலைக்காட்சித் தொடர் தயாரித்தவரும் இவர்தான். சமூக சிந்தனையுள்ள பல சினிமாக்களை தயாரித்து, இயக்கி பரபரப்பு ஏற்படுத்தியவர் பி.ஆர்.சோப்ரா