மக்களுக்காக தனிச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை வழங்கி வரும் மக்கள் தொலைக்காட்சியில் கிராமத்துப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
நாற்று நடுவோர், ஏற்றம் இறைப்போர், சுண்ணம் இடிப்போர் உள்ளிட்ட பல உழைப்பாளிகள், களைப்பு தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே வேலை செய்வார்கள்.
இந்தப் பாடல்களின் இனிமைக்கு என்றுமே குறைவில்லை. இதுபோன்ற நாட்டுப்புற பாடல்களை அழகான அரங்கில் ரசிகர்களுக்காக வழங்க இருக்கும் நிகழ்ச்சிதான் கிராமத்துப் பாட்டு.
அர்த்தமும் புரியாமல், வார்த்தைகளும் விளங்காமல் காதுகளை செவிடாக்கிக் கொண்டிருக்கும் தற்போதைய சில சினிமாப் பாடல்களுக்கு மத்தியில் நமது நினைவுகளை கிராமத்து பாட்டு நிகழ்ச்சி எங்கோ எடுத்துச் செல்லும் என்பது உறுதி.
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை தோறும் காலை 8.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.