நடிகர் டெல்லி கணேஷ் திருப்பாவை தொடரில் அய்யங்கார் பாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்ததில் என் நடிப்புக்கு சவாலான விஷயம் என்கிறார் பெருமிதத்துடன்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் சொக்குதே மனம் இசைநிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பாம்புகளை அடிப்படையாகக் கொண்ட நாகவல்லி தொடரில் நடிக்க பயன்படுத்திய பாம்புகள் பயிற்சி கொடுக்கப்பட்ட பாம்புகள் அல்ல. மதுராந்தகம் அருகில் கிடைத்த ஒரு பாம்புபிடரான் வைத்திருந்த பாம்புகளை சீரியலுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சென்னையில் பகல் நேரத்தில் சாலைகளில் படப்பிடிப்பு நடத்த தடை விதித்து விட்டதால் சாலைகளில் எடுக்க வேண்டிய காட்சிகளை படம் பிடிக்க புதுச்சேரி போய் விடுகிறார்கள் யூனிட் ஆட்கள்.
சின்னத் திரையில் மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ் பெற்ற `போஸ்' வெங்கட், இப்போது பெரிய திரையில் அதிக படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரைக்கு கால்ஷீட்டே கொடுக்க முடியாத அளவிற்கு.
உயிரோசை என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட கண்ணன் அந்தப் படம் வராததால் இப்போது சின்னத்திரை தொடருக்கு வந்து விட்டார். ஜே.கே. இயக்கி தயாரிக்கும் திருப்பாவை தொடரின் நாயகன் இவர்தான்.
ஞாயிறுதோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரில் இப்போது நடிகர் தாமுவும் இணைந்திருக்கிறார்.