Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெ‌ண்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி பெண்கள்.காம்

Advertiesment
பெ‌ண்களு‌க்கான ‌நிக‌ழ்‌ச்‌சி பெண்கள்.காம்
மெகா டி.வி.யில் வார‌ந்தோறு‌ம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் `பெண்கள்.காம்' நிகழ்ச்சியில் பெண்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும், பல்வேறு பகுதிகளாக ஒளிபரப்பப்படுகிறது.

குறிப்பாக பெண்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது.

அ‌‌தி‌ல் ஒரு பகு‌தியாக ‌‌புதிதாக அறிமுகமாகி இருக்கும் புதிய ஆடைகள், ஆபரண‌ங்க‌ள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அவற்றை எ‌வ்வாறு உபயோகப்படுத்துவது எ‌ன்பது குறித்தும், ப‌த்‌திரமாக பராமரிப்பது குறித்தும் எடுத்துரைக்கிறார்கள்.

அடுத்து வரும் கலையும் கைவண்ணமும் பகுதியில் பெ‌ண்க‌ள் வீட்டு அலங்காரப் பொருட்களை செ‌ய்வது கு‌றி‌த்து செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகிறது.

சமையல் பகுதியில் ஆரோ‌‌க்‌கியமான, பாரம்பரியம் மிக்க பழமையான உணவு வகைகளை சமைப்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் கா‌ண்‌பி‌க்க‌ப்படு‌கிறது.

தெரிந்ததும் தெரியாததும் பகுதியில் காய்கறிகள், பழ‌ங்க‌ள், மூலிகைகளை பற்றி நம‌க்கு‌த் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷ‌ய‌ங்களை அ‌ளி‌க்‌கி‌ன்றன‌ர்.

கடை‌சியாக கு‌றி‌ப்பு‌ப் பகுதியில் உடல் அழகை பாதுகாத்து பராமரிப்பது குறித்து பல பயனுள்ள குறிப்புகளை வழங்குவதுடன், ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொள்வதன் மூலமாக உடல் அழகை பராமரிப்பது குறித்தும் அழகு‌க் கு‌றி‌ப்புகளை வழங்குகிறார் வினோதினி.

Share this Story:

Follow Webdunia tamil