ஆடி மாதம் துவங்கிவிட்டாலே பண்டிகைகளும் துவங்கிவிட்டது என்றேக் கூறலாம். அதிலும் இம்மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.
ஆடி பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடிக் கிருத்திகை, வரலட்சுமி விரதம் ஆகிய பண்டிகைகள் வந்து திக்குமுக்காட வைக்கும் மாதமும் கூட.
இந்த சிறப்பான நாட்கள் தோன்றிய கதை, அம்பாளின் சிறப்பு, வழிப்படும் முறை ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழு நீள சொற்பொழிவை மஹாரண்யம் ஸ்ரீமுரளிதர சுவாமிஜி மேற்கொள்கிறார்.
இந்த சொற்பொழிவு விஜய் டி.வி.யில் திங்கள்- வியாழன், மாலை 6.30 மணிக்கு ஆடி மாதம் முழுவதும் ஒளிபரப்பாகும்.