மக்கள் தொலைக் காட்சியில், வணிகர்கள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் நடத்தப்படும் நிகழ்ச்சி முகவரி.
வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது முகவரி.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வணிகர்களும், குறு வணிகர்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் சிறு வணிகர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது.
இது வெறும் விளம்பரங்களின் அணிவகுப்பாக மட்டுமல்லாமல், சுற்றுலா தகவல்கள், சந்தைக்குப் புதிதாக வந்த பொருட்கள், அதன் பயன்பாடுகள் பற்றிய அறிமுகம், நுகர்வோர் பொருட்களில் எந்தெந்த பொருட்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எதற்கு கிடைக்கிறது. எந்தக் கடையில் தள்ளுபடி நடக்கிறது போன்ற தகவல்கள், புதிய புதிய நகைகள் மற்றும் புடவைகளை அறிமுகப்படுத்தும் கடைவீதி பகுதி என்று அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் ஒளிபரப்பாகிறது.