குழந்தைகளைக் கவரும் விதத்தில் "பட்டாம்பூச்சி' என்ற புதிய நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
குழந்தைகள் மட்டும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுப் போட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகளுடன் தொகுப்பாளர் யாழினி பங்கேற்கிறார்.
முதல் சுற்றில்... குழந்தைகள் விளையாடி மகிழும் "கொக்கு பற பற, கோழி பற பற...' விளையாட்டு இடம்பெறும். தொகுப்பாளர் "பூனை பற பற" என்று கூறினால் விளையாடும் குழந்தை "பூனை பற பற" என்று சொல்லாமல், "பூனை பறக்காது" என்று சொன்னால் தான் தொடர்ந்து விளையாடலாம். தவறாக சொல்லிவிட்டால் முதல் சுற்றிலேயே அக்குழந்தை வெளியேறிவிடும்.
இரண்டாம் சுற்றில்... திரையில் விநோதமான கற்பனை உருவம் காண்பிக்கப்படும். அந்த உருவத்தில் பயன்படுத்தப்பட்டுளள மிருகங்கள், பறவைகளைச் சரியாக அடையாளம் காட்டும் குழந்தைகள் அடுத்த சுற்றுக்கு செல்லலாம்.
இறுதிச் சுற்று... திரையில் எண்கள் இருக்கும்; அதிலிருந்து ஒரு எண்ணை குழந்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த எண்ணில் இருக்கும் விஷயத்தைப் பற்றி வேண்டும். அதாவது, 3 என்ற எண்ணை ஒரு குழந்தை தேர்ந்தெடுக்கிறது; அதில் ஒரு பறவை வருகிறது என வைத்துக் கொண்டால் அது என்னப் பறவை எனக் கூறினால் பரிசு வழங்கப்படும்.'
குழந்தைகளுக்கு பொழுதுபோக்காகவும் அதே சமயம் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமையும். இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் மூன்று சுற்றுகளிலும் பரிசுகள் உண்டு. இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.