Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகளிர் மட்டும் இப்போது 18-35 வயது மட்டுமே

Advertiesment
மகளிர் மட்டும் இப்போது 18-35 வயது  மட்டுமே

Webdunia

, புதன், 17 அக்டோபர் 2007 (12:32 IST)
webdunia photoWD
ஜெயா டிவியின் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சியில், தற்போது மேலும் சுவாரசியமான நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வடிவ நிகழ்ச்சியில் 18-35 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே பங்கு பெற முடியும். நிகழ்ச்சிக்கு இளமைப் பொலிவைக் கூட்டவே இந்தப் புதிய விதிமுறை.

தனித்திறமை போட்டிகள் பல இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.

திருமணமான பெண்களுக்கு ஒரு தனிப்போட்டி நடக்க இருக்கிறது. நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் அழகுப் பெண்களுக்கு சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் பெண்ணுக்கு ஜெயா டி.வி.யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகும் வாய்ப்பு காத்திருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் வெற்றி பெறுபவருக்கு ஒரு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும். இது தவிர 1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளும் உண்டு.

மதுரையில் தொடங்கிய இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக திருச்சியில் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்சி சேவா சங்கம் பள்ளியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை மோகினி தொகுத்து வழங்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil