"மெட்டி ஒலி" காயத்ரி மீண்டும் நடிக்கும் மேகலா
மிகப்பெரிய வெற்றி பெற்ற மெட்டி ஒலி, முகூர்த்தம் ஆகிய மெகாத் தொடர்களைத் தொடர்ந்து சினிடைம்ஸ் நிறுவனம் தற்போது மலர்கள் என்ற மெகாத் தொடரை தயாரித்து வருகிறது. இந்தத் தொடர் 409 எபிசோட்களுடன் வருகிற 25.05.2007 அன்று முடிவடைகிறது.
அதைத் தொடர்ந்து 28.05.2007 அன்று சன் டி.வியில் இரவு 7.30 முதல் 8.00 மணி வரை மேகலா என்ற புதிய தொடர் ஆரம்பமாகிறது.
இத்தொடரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு "மெட்டி ஒலி" காயத்ரி நடிக்கிறார்.
மற்றும் யுகேந்திரன், தீபன் சக்கரவர்த்தி, வடிவுக்கரசி, ராஜலட்சுமி, குயிலி, சண்முகசுந்தரம், ராஜ்காந்த், 4ரர்ஜ், பாவனா, ஸ்ரீவித்யா, ரேவதிப்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேகலா..! கடவுளோடு சதுரங்கம் ஆடும் கன்னித்தாய்!
பெண்களுக்குப் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டமில்லாது கிடைப்பது கட்டுப்பாடுகள் தான். பெண்களை வேட்டையாடத் துடிக்கும் இந்த சமுதாயத்தில் பிறந்தவள் தான்- மணிமேகலை.
தன்னையே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத பெண்களின் மத்தியில் தன் சுதந்திரத்தை தேடியும் பிரிக்கப்பட்ட உறவுகளையும் தேடி அலையும் பெண்ணின் கதை தான் "மேகலா" தொடர்.
மணிமேகலை-இவள் கதையின் நாயகி மட்டுமல்ல, உங்கள் வீட்டில் தாயாகவோ, மனைவியாகவோ, தங்கையாகவோ நம்மைச் சுற்றி இருப்பவள்.
தயாரிப்பு மேற்பார்வை: ராஜாஸ்ரீதர்
ஒளிப்பதிவு: சரத்சந்தர் டி.எ·ப்.டெக்.,
படத்தொகுப்பு: சிங்கைராஜா
பின்னணி இசை: செல்வம்
டைட்டில் இசை: அக்னி
பாடல்: யுகபாரதி
வசனம்: பாஸ்கர் சக்தி
கதை, திரைக்கதை: சி.யு.முத்துச் செல்வன்
இயக்கம்: இ.விக்கிரமாதித்தன் எம்.ஏ., டி.எ·ப்.டெக்.,
தயாரிப்பு: சினிடைம் எண்டர்டெயின்மென்ட்