திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாச்சலபதி கோயிலில் வரும் 24-ந் தேதி (புதன் கிழமை) ஸ்ரீராமநவமி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
வரும் 24ஆம் தேதி ராமர் அவதரித்த தினமான ஸ்ரீராம நவமி விழா வருகிறது. அதையொட்டி திருப்பதியில் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
ஸ்ரீராம நவமியன்று காலை 7 மணிக்கு அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் திருவீதி உலா நடைபெறும். அதைத் தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க வாசலுக்கு சீதா - ராம, லட்சுமணர் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
அங்கு வேத விற்பன்னர்கள் ஆஸ்தான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
மறுநாள் (வியாழக்கிழமை) ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
அன்று இரவு சீதா - ராம, லட்சமணர் மற்றும் ஆஞ்சநேயர் திருச்சி வாகனத்தில் 4 மாடவீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து கோயில் தங்க வாசலில் வேத பண்டிதர்கள் ராமாயண கதையை படிப்பார்கள்.