ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் அரியச் செய்தி. ஷீரடிக்கு சுற்றுலா ரயில் ஒன்றை இயக்க இந்திய ரயில்வா கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தீபாவளிக்கு சிறப்பு ரயில், கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரயில் என்பது போய், தற்போது சுற்றுலாத் துறையினரின் நடவடிக்கையால், மக்கள் அதிகமாக விரும்பிச் செல்லும் இடங்களுக்கு இந்திய ரயில்வே சுற்றுலா கழகம் ரயில்களை இயக்க முன்வந்துள்ளது.
இந்த அடிப்படையில், இந்திய ரயில்வே சுற்றுலாக் கழகம், ஷரடி-பண்டரிபுரம் மற்றும் மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா ரயில்களை இயக்க உள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா ரயில் 14ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக செல்கிறது.
இந்த ரயிலில் நபர் ஒருவருக்கு ரூ.3591 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் ரயில் கட்டணம், உணவு போன்றவையும் அடங்கும்.