Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌கிரு‌ஷ‌்‌ண‌கி‌ரி‌யி‌ல் மாங்கனி கண்காட்சி

‌கிரு‌ஷ‌்‌ண‌கி‌ரி‌யி‌ல் மாங்கனி கண்காட்சி
, திங்கள், 22 ஜூன் 2009 (11:24 IST)
அகில இந்திய மாங்கனி கண்காட்சி ‌கிருஷ‌்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ன்று மாலையுட‌ன் முடிவடையு‌ம் மா‌ங்க‌னி க‌ண்கா‌ட்‌சியை ஏராளமானோ‌ர் குழ‌ந்தைகளுட‌ன் வ‌ந்து பா‌ர்‌த்து‌ச் செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

4 மாநிலங்களை சேர்ந்த 50 வகை மாங்கனிகள் இ‌‌ந்த க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50 கிராம் முதல் 2 கிலோ எடை வரை உள்ள மாங்காய்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

கிருஷ்ணகிரியில் 17-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை தொடங்கியது. இந்த மாங்கனி கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் ‌4 மா‌நில‌ங்களை‌‌ச் சே‌ர்‌ந்த ‌விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்கனிகளை பார்வைக்கு வைத்து‌ள்ளன‌ர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் விளையும் பெங்களூரா, மல்கோவா, அல்போன்சா(காதர்), பீத்தர், செந்தூரா, நீலம், சக்கரக்குட்டி போன்ற ரகங்கள் க‌ண்காட‌்‌சி‌யி‌ல் அதிகமாக வைக்கப்பட்டிருந்தன.

இதுதவிர வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களது தோட்டத்தில் விளைந்த மாங்காய்களை பார்வைக்கு வைத்திருந்தனர். கர்நாடாகாவில் மிகவும் புகழ் பெற்ற மல்லிகா, ஆந்திரா மாநில புகழ் பங்கனப்பள்ளி, மராட்டிய மாநிலத்தில் விளையும் ரத்தினகிரி போன்ற வகை மாங்கனிகளும் போட்டி அரங்கில் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி போட்டி அரங்கில் மொத்தம் 50 ரகங்களை சேர்ந்த 512 மாங்கனிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. 50 கிராம் எடை உள்ள சக்கரக்குட்டி பழம் முதல் 2 கிலோ எடை கொண்ட கெடாமர் வகை மாம்பழம் வரை கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த பல்வேறு வகை மாங்கனிகளை பொதும‌க்க‌ளு‌ம், குழ‌ந்தைகளு‌ம் க‌ண்டு வியப்படைந்தனர்.

கண்காட்சி திடலில் தோட்டக்கலைத்துறை சார்பில் 10 அடி உயரம் கொண்ட மாங்கனி கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தின் அடிப்புறம் பலாப்பழம் மூலமும், மீதம் உள்ள கோபுரம் முழுமையும் 5 ஆயிரம் பெங்களூரா வகை மாம்பழம் கொண்டும் உருவாக்கப்பட்டிருந்தது.

இதே போல் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளை கொண்டு பல்வேறு வகை பறவைகள், விலங்குகள், மீன், விநாயகர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு ஏரியிலும், அதன் கரையிலும் பறவைகள், விலங்குகள் இருப்பது போல தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சேவல், கோழி, முதலை, ஓணான், டைனோசர், ஆமை, முயல், மீன், கொக்கு போன்ற உருவங்களை கத்திரி, முள்ளங்கி, முட்டைகோஸ், பூசணிக்காய், பீட்ரூட் போன்ற காய்கறி மூலம் உருவாக்கி இருந்தனர்.

கோவையை சேர்ந்த சக்தி என்பவரது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் 700 கிலோ காய்கறிகளை கொண்டு இந்த உருவங்களை சித்தரித்திருந்தனர். இந்த காய்கறி உருவங்களை கண்காட்சிக்கு வந்தவ‌ர்க‌ள் ஆ‌ர்வ‌‌த்துட‌ன் பா‌ர்‌த்து‌ச் செ‌ன்றன‌ர்.

கண்காட்சி திடலில் மாங்கனி விழாக்குழு சார்பில் செயற்கை குற்றால நீர்வீழ்ச்சியு‌ம் அமைக்கப்பட்டிரு‌ந்தது. சிறுவர்களை மகிழ்விக்கும் வண்ணம் 45 வகையான விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களு‌ம் ‌நிறை‌ந்து‌ள்ளன. அடுத்த மாதம் 22-ந் தேதி வரை இந்த அகில இந்திய மாங்கனி விழா நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil