சென்னைத் தீவுத்திடலில் நடந்து வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீவுத்திடலில் நடந்து வரும் சுற்றுலாப் பொருட்காட்சியில் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
பிப்ரவரி 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இங்கு இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படும்.
இதற்கான ஏற்பாட்டை ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளன.