Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை அருங்காட்சியகத்தில் கடல் ஆமை கண்காட்சி 7ஆம் தேதி தொடக்கம்

Advertiesment
செ‌ன்னை அருங்காட்சியகத்தில் கடல் ஆமை கண்காட்சி 7ஆம் தேதி தொடக்கம்
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:29 IST)
கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த கண்காட்சி, செ‌ன்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக நூற்றாண்டு கூடத்தில் 7ஆம் தேதி தொடங்குகிறது.

ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, கடல் ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த மாதங்களில் கடற்கரைக்கு வரும் பல ஆமைகள் படகுகளில் அடிபட்டு இறந்துவிடுகின்றன. இது தவிர கடற்கரைக்கு வருபவர்கள் ஆமைகளை துன்புறுத்துவதாலும் இறக்கின்றன.

இந்நிலையில், கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் இப்போது நடந்து வருகிறது. இதை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியை, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சி.கே.ஸ்ரீதரன், வரு‌ம் 7ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 13ஆம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

உலகில் உள்ள பல வகை அரிய கடல் ஆமைகள், அவற்றின் வாழ்க்கை வரலாறு, கடல் ஆமைகள் அழிவதற்கான காரணங்கள், அவற்றை பாதுகாப்பது எப்படி போன்ற விவரங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil