இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 10.4 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2008 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 38.7 லட்சம் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 35.08 லட்சம் ஆகும்.
சுற்றுலாத் துறை மூலம் இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் அரசுக்கு ரூ.36,464 கோடி அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது கடந்த ஆண்டைவிட 17.8 விழுக்காடு அதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில் 20.3 விழுக்காடு அதிகமாகும்.