Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் ‌‌மீ‌ன் கண்காட்சி

சென்னையில் ‌‌மீ‌ன் கண்காட்சி
இந்தியாவில் முதல் முறையாக 500 வகையான வண்ண ‌மீன்களின் கண்காட்சி சென்னை வ‌ள்ளுவ‌ர் கோ‌ட்ட‌த்‌தி‌ல் 1-ந் தேதி தொடங்க உ‌ள்ளது.

இ‌ந்த ‌மீ‌ண் க‌ண்கா‌ட்‌சி கு‌றி‌த்து சென்னை வண்ணமீன் வளர்ச்சி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.செல்வராஜ் சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சினா‌ர்.

அ‌ப்போது, வண்ண மீன்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா 1-ந்தேதி நடைபெற உள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி 5-ந்தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

இந்தியாவில் முதல் முறையாக 300 முதல் 500 வகையான வண்ண மீன்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. வண்ணமீன் போட்டியும், சிறப்பான வண்ணமீன் வளர்ப்பு தொட்டி அலங்கரிப்பு போட்டியும் நடைபெறும். இதில் இந்தியாவில் இருந்து 200 மீன் வளர்ப்போர் பங்கேற்கின்றனர்.

இதற்கென 70 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மீன்வளர்ப்புக்கு தேவையான 500 வகை பொருட்களையும் கண்காட்சியில் பார்க்கலாம்.

100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் வண்ணமீன்கள் உள்ளன. 80 சதவீதம் வண்ணமீன்கள் சென்னையில் இருந்துதான் இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. வாஸ்து மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரில் 10 வீடுகளுக்கு ஒரு வீட்டில் வண்ணமீன் வளர்க்கிறார்கள். சென்னையில் 100 வீடுகளுக்கு ஒரு வீட்டில் வண்ணமீன் வளர்ப்பதே அரிதாக இருக்கிறது.

வாஸ்து அயனிச் சமன்பாட்டைக் கொண்டு வருவதில் மீன் தொட்டிகள் பெரும் பங்காற்றுகின்றன. மீன் தொட்டிகளை கிழக்கு அல்லது வடக்கில் வைக்க வேண்டும். அதேபோல வரவேற்பறை மற்றும் மன உழைப்பை உந்துவதற்கான இடங்களில் வைக்கலாம். படுக்கை அறைகளில் மீன்தொட்டிகளை வைக்கக்கூடாது எ‌ன்றார,

Share this Story:

Follow Webdunia tamil