வண்டலூர் பூங்காவைச் சுற்றிப் பார்க்க வசதியாக பேட்டரி கார்களை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் புதிய திட்டம் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.
இதோடு வண்டலூர் பூங்காவில் மான்கள் உலவிடம், கூடுதல் யானை சவாரி போன்றவற்றை உள்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
வண்டலூர் பூங்காவிற்கு வரும் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக யானை சவாரி துவக்கப்பட்டது. அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பேட்டரி கார்களையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த விழாவில், வண்டலூர் பூங்காவுக்குள் பேட்டரி காரை ஓட்டிச் சென்ற அமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர், யானை உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி யானை சவாரி திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.