Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி

சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி
, வியாழன், 26 ஜூன் 2008 (12:45 IST)
சென்னையில் முதன்முறையாக சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது என்று சுற்றுலா துறை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

இது கு‌றி‌த்து சென்னையில் அவ‌ர் பேசுகைய‌ி‌ல், சுற்றுலா மற்றும் கல்வி கண்காட்சி 2008, சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், `ஸ்பெல் பவுண்ட்' நிறுவனத்துடன் இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறது. நாளை மாலை 4 மணிக்கு துவ‌க்க ‌விழா நடக்கிறது. ஜுலை மாதம் 6-ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

வார நாட்களில் பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சியை பார்வையிடலாம். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு (8-ம் வகுப்பு வரை) 5 ரூபாயும் வசூலிக்கப்படும். 30 மாணவர்களுக்கு மேல் குழுக்களாக வருபவர்களுக்கு ஒருவருக்கு ரூ.3 வீதம் சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு ஊர்களில் நடத்தப்படும் ஓட்டல், தங்கும் விடுதிக்காக இந்த கண்காட்சியில் பதிவு செய்தால் 25 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். அதுபோல படகு இல்லத்திற்கு 20 சதவீதமும், திருப்பதி தவிர மற்ற சுற்றுலா தலங்களுக்கு 15 சதவீதமும், மாணவர்களின் பிரத்யேக சுற்றுலாவிற்கு 30 சதவீதமும், வி.ஜி.பி., எம்.ஜி.எம்., பிளாக் தண்டர், அதிசயம் போன்ற தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு 15 சதவீதமும் கட்டண சலுகை அளிக்கப்படும். இந்த சலுகை 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பனிமழை கொண்டாட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இதன்மூலம் ரூ.70 லட்சத்து 34 ஆயிரம் வருவாய் கிடைத்தது. இதுபோல, கோவையில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் பனிமழை கொண்டாட்டத்துடன் கோடை சுற்றுலா பொருட்காட்சியும் நடத்தப்படும் எ‌ன்று வெ.இறையன்பு கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil