Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளு குளு ‌‌‌சீ‌ச‌ன் தொட‌ங்‌கியது: ஊட்டிக்கு நாளை முத‌ல் சிறப்பு ரெயில்!

Advertiesment
குளு குளு ‌‌‌சீ‌ச‌ன் தொட‌ங்‌கியது: ஊட்டிக்கு நாளை முத‌ல் சிறப்பு ரெயில்!
, வெள்ளி, 28 மார்ச் 2008 (10:59 IST)
குளு குளு ‌சீச‌ன் தொட‌ங்‌‌கி ‌வி‌ட்டதா‌ல் ஊ‌ட்டி‌‌க்கு நாளை முத‌ல் ‌சிற‌ப்பு மலை இர‌யிலை தெ‌ற்கு இர‌யி‌ல்வே இ‌ய‌க்‌‌குகிறது.

கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன் தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ள் உ‌ள்பட செ‌ன்னை உ‌ள்பட ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது. த‌ற்போது மழை ஓ‌ய்‌ந்து வெ‌யி‌ல் வா‌ட்டி எடு‌க்க ஆர‌ம்‌பி‌‌த்து ‌வி‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ஊட்டியில் `குளுகுளு' சீசன் தொடங்கிவிட்டது. கடும் வெயிலில் சிக்கி தவிக்கும் மக்கள் ஊட்டிக்கு செ‌ன்ற வ‌ண்ண‌ம் உ‌ள்ளன‌ர்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மலைஇரயில், பேரு‌ந்து வச‌திக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. அழகிய இயற்கை காட்சிகளையும், காட்டில் சுற்றித்திரியும் வன விலங்குகளை பார்த்து ரசிக்க மலை இர‌யிலே ‌சிற‌ந்தது எ‌ன்பத‌ா‌ல் ம‌க்‌க‌ள் அத‌ை ‌விரும்புகின்றனர்.

இதனால் மலை ரயிலில் கூட்டம் அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளது. இதையடு‌த்து சு‌ற்றுலா பய‌ணிக‌ளி‌ன் வச‌தி‌க்காக கூடுதலாக சிறப்பு மலை ரயில் விட தெ‌ற்கு இர‌யி‌‌ல்வே முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஜூ‌ன் 8ஆ‌ம் தேதி வரை இ‌ந்த சிறப்பு ரயில் விடப்படுகிறது.

இந்த ‌‌சி‌ற‌ப்பு மலை இரயில் மேட்டுப் பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 3.40 மணிக்கு சேரும்.

ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு 3 மணிக்கு சேரும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

தெ‌‌ற்கு இர‌யி‌ல்வே‌யி‌ன் இ‌ந்த அ‌றி‌வி‌ப்பா‌ல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil