கடந்த சில ஆண்டுகளாக சில ஆண்டுகளாகவே இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சி சர்வதேச சராசரியைவிட அதிகமாக உள்ளதாகவும், கடந்த 2006-07 ஆம் நிதியாண்டு தொடர்ந்து நான்காவது ஆண்டாக அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையிலும், அன்னிய செலாவணி ஈட்டுவதிலும் இந்திய சுற்றுலாத் துறை சாதனைப் படைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் "இன்கிரிடிபிள் இந்தியா" என்ற திட்டத்தைச் மத்திய அரசு செயல்படுத்தியதன் மூலம் உலக சுற்றுலா வரைப்படத்தில் இந்தியாவுக்கென்று ஒரு தனி இடத்தைப்பெற முடிந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் 46.33 லட்சம் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 விழுக்காடு அதிகம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
சடந்த 2006-07 ஆம் நிதியாண்டில் சுற்றுலா மூலம் கிடைத்த அன்னிய செலாவணி 969 கோடியே 60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 23 விழுக்காடு அதிகமாகும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.