குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம், பொதுமக்கள் பார்வைக்காகப் பிப்ரவரி 16-ம் தேதி திறக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மிகவும் பிரபலமான மொகலாயர் தோட்டம், ஆண்டுதோறும் ஒரு முறை பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் மார்ச் 28-ம் தேதி வரை திறந்து வைக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் இதைப் பார்வையிடலாம்.
பாரமரிப்புக்காக திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தவிர மார்ச் 21, 22 ஆகிய தினங்களும் விடுமுறையாகும்.