சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை செல்லும் எங்கும் ஏறலாம் எங் கும் இறங்கலாம் பேருந்து சேவையை சுற்றுலாத் துறை நாளை துவக்குகிறது.
இதில் 4 புதிய குளிர்சாதன பேருந்துகள் ஒரு மணிக்கு ஒரு முறை சென்னை - மாமல்லபுரம் இடையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் வந்து செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ. 250 கட்டணம் மட்டுமே. ஒரு முறை கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் இந்த பேருந்தில் எங்கும் ஏறி எங்கும் இறங்கிக் கொள்ளலாம்.
சென்னையிலிருந்து முதல் பேருந்து காலை 9 மணிக்கும், கடைசி பேருந்து மாலை 4 மணிக்கும் மாமல்லபுரம் புறப்படும். மாமல்லபுரத்திலிருந்து காலை 10.40 மணிக்கு முதல் பேருந்தும், மாலை 5.40 மணிக்கு கடைசிப் பேருந்தும் சென்னை புறப்படும்
இது சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களுக்கும் செல்லும். பயணிகள் எந்த சுற்றுலாத் தலத்திலும் ஏறலாம். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மீண்டும் அவ்வழியே வரும் இவ்வகை பேருந்தில் பயணிக்கலாம்
இதில் பயணிப்பவர்கள் சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்களின் நுழைவு கட்டணத்தில் 10 முதல் 27 சதவீதம் வரை சலுகை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் முதல் 30 நாள் பயணம் செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
இதற்கான டிக்கெட்டுகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா வளாகத்திலும், அனைத்து முன்னணி ஹோட்டல்களிலும் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு: 044 - 2538 3333, 2538 4356, 2538 4444.