Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

108 அம்மன் கோயில்களுக்கு சென்று வரலாமா?

Advertiesment
108 அம்மன் கோயில்களுக்கு சென்று வரலாமா?

Webdunia

, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:00 IST)
108 அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவரும் வகையில் சிறப்பு சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆடி மாதம் துவங்கிவிட்டதல்லவா... இனி அம்மன் கோயில்கள் பக்கம்தான் அனைவரது பார்வையும்.... இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று முதல் 108 அம்மன் கோயில்களுக்கு செல்லும் சிறப்பு சுற்றுலா அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த சுற்றுலா ஒவ்வொரு வாரமும் வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள 108 அம்மன் கோயில்களுக்குச் சென்றுவிட்டு 5 நாட்களுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

இந்த சிறப்பு சுற்றுலாவிற்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.2,300 கட்டணமாகும்.

மேலும் விவரங்கள் அறிய, தொலைபேசி எண் 044-25383333 / 25384444/ 25389857 அல்லது 25384356 / 25382916 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil