தந்தை மகனுக்காற்றும் உதவி, அலிபாபா. இது படத்தின் கதை அல்ல. தயாரிப்பாளர் பட்டியல் சேகர், தனது இளைய மகன் கிருஷ்ணாவை ஹீரோவாக்க எடுத்திருக்கும் படம் அலிபாபா. சேகரின் மூத்த மகன், இயக்குநர் விஷ்ணு வர்தன்.
சீட்டு விளையாட்டில் ஒன்றோ இரண்டோ ஜோக்கர் வந்தால் அதிர்ஷ்டம். எல்லாமே ஜோக்கராக இருந்தால்? கிருஷ்ணாவின் வாழ்க்கையில் இப்படி எல்லாமே ஜோக்கர்கள், பிரச்சனைகள். இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதை.
நீலன் கே.சேகர் இயக்கும் அலிபாபாவை பட்டியல் சேகருடன் இணைந்து சஞ்சீவ் கபூர் தயாரித்துள்ளார். மலையாள நடிகர்கள் பிஜூ மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ், ராதாரவி என மிரட்டும் நடிகர்கள்.
படம் குறித்து மேலும் சில தகவல்கள்:
வித்யாசாகர் இசை. பா.விஜய், யுகபாரதி, ஜெயந்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
எடிட்டிங் வி.டி.விஜயன், நடனம் கல்யாண், ஒளிப்பதிவு தினேஷ் குமார்.
நாயகி ஜனனிக்கும் இது முதல் படம்.
நய்னா என்பவர் ஒற்றைப் பாடலுக்கு ஆடியுள்ளார். இதனைப் படு கவர்ச்சியாகப் படமாக்கியுள்ளனர்.