அம்மா கிரியேஷன்ஸின் சரோஜா, வெங்கட்பிரபுவின் இரண்டாவது படம். சென்னை-28ல் நடித்த அதே டீம்தான் இதிலும். முக்கிய வேடத்தில் ஜெய், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன் மற்றும் வைபவ்.
வெங்கட்பிரபு ஜென்டில்மேன். ஹாலிவுட் Babel படத்தின் பாதிப்பில் சரோஜா திரைக்கதையை அமைத்திருப்பதாக மற்றவர்கள் கண்டுபிடிக்கும் முன்பே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
நான்கு சம்பந்தமில்லாத நபர்களின் ஒரு நாள் வாழ்க்கையே சரோஜா. ஒரு கொலை நால்வரையும் ஒரே நேர்கோட்டிற்கு கொண்டு வருகிறது. இவர்கள் நால்வரும் தேடும் பெண்ணாக வேகா நடித்துள்ளார்.
படம் குறித்து...
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதுடன் ஒரு பாடலைப் பாடி நடித்துள்ளார்.
சிங்கப்பூரின் பெரிய நைட்கிளப்பில் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ், ஜெயராம் நடித்துள்ளனர். காஜல் அகல்வால், நிகிதா ஆகியோரும் படத்தில் உண்டு.
சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத புதுமையான திரைக்கதையில் தயாராகி வருகிறது சரோஜா.