ஹாசினி சினிமாவில் தயாரிப்பில் GV பிலிம்ஸ் வழங்கும் மஞ்சள் வெயில் படத்தை ராஜா ஆறுமுகம் இயக்கியுள்ளார். தயாரிப்பு ஹெச். சையத் இப்ராஹிம்.
படத்தின் பெயரே சொல்லி விடும் இதுவொரு காதல் கதை என்பதை சந்தியா, பிரன்னா, பாலா நடித்துள்ளனர். மூன்று பேர் என்றவுடன் அடுத்தது வரும் கேள்வி, முக்கோண காதல் கதையா? இயக்குனரின் பதில், வழக்கமான முக்கோண காதல் கதை அல்ல!
படத்தின் பெரும் பகுதியை சென்னையிலும், ஊட்டியிலும் எடுத்துள்ளார் இயக்குனர். பிரசன்னா மீசை இல்லாமல் நடித்துள்ளார். பாலா கேரக்டரை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
படத்தை பற்றி...
* பரத்வாஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் பா.விஜய்.
* கேமரா கவியரசு. உதயசங்கர் எடிட்டிங். சண்டை தளபதி தினேஷ். கலை இயக்கம் ஜனா.
* எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.கே., நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
* பாடல் காட்சிகளை பாங்காக்கில் எடுத்துள்ளனர்.