Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'யாரடி நீ மோகினி'

Advertiesment
'யாரடி நீ மோகினி'
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (19:07 IST)
தனுஷ், நயனதாரா முதல் முறையாக இணையும் 'யாரடி நீ மோகினி' படத்தை ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது!

தெலுங்கில் செல்வராகவன் எழுதி இயக்கிய 'ஆடவரி மாட்லக்கு அர்த்தவே வேறுலே' படத்தின் தமிழ் ரீ-மேக்தான் 'யாரடி நீ மோகினி'.

தெலுங்குப் படத்தில் செல்வராகவனின் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்த மித்ரன் ஆர். ஜவஹர் 'யாரடி நீ மோகினி'யை இயக்குகிறார். இது இவருக்கு இயக்குனராக முதல் படம்.

செல்வராகவனின் பேனா, முதல் முறையாக உருவாக்கியிருக்கும் குடும்பப் பின்னணியில் அமைந்த காதல் கதையிது. வேலை வெட்டி இல்லாத இளைஞனாக இதில் தனுஷ் நடித்திருக்கிறார். தெலுங்கில் வெங்கடேஷ் செய்த வேடம் இது. த்ரிஷா நடித்த ச·ப்ட்வேர் இன்ஜினியர் வேடத்தில் நயன்தாரா. ஸ்ரீகாந்தின் பாத்திரத்தில் 'வானம் வசப்படும்' கார்த்திக்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் நா. முத்துக்குமார் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு சித்தார்த். கதை, திரைக்கதை, வசனம் செல்வராகவன்.

"தெலுங்கு ரீ-மேக் என்றாலும் தமிழ் சூழலுக்கும், ரசிகர்களுக்கும் தகுந்தபடி காட்சிகளை மாற்றியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ஜவஹர்.

Share this Story:

Follow Webdunia tamil