ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஜனநாதன் இயக்கும் 'பேராண்மை' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25 ஆம் தேதி தொடங்குகிறது.
வனத்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் காரையாறு பகுதியில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான கலை இயக்குநர் செல்வ குமார் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம் போன்று அரங்கம் அமைத்துள்ளார். தாமிரபரணி கரையில் போடப்பட்டுள்ள இந்த அரங்கில் 40 குடிசைகள் இடம் பெறுகின்றன.
படத்தில் மொத்தம் ஐந்து நாயகிகள். அவர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் காரையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஜெயம் ரவி இடம்பெறும் காட்சிகளை மட்டும் ஜனநாதன் இயக்குகிறார்.
வித்யாசாகர் இசையமைத்த பாடல் ஒன்றையும் இந்த அரங்கில் படமாக்குகிறார்கள்.