Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சக்தி ஜோடியாக சந்தியா நடிக்கும் படம்

Advertiesment
சக்தி ஜோடியாக சந்தியா நடிக்கும் படம்
, வியாழன், 31 ஜனவரி 2008 (11:44 IST)
கூல் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் "மகேஷ், சரண்யா மற்றும் பலர்..."

இப்படத்தில் துடிப்புமிகுந்த இளைஞனாக 'தொட்டால் பூ மலரும்' நாயகன் சக்தி நடிக்கிறார். இவரது ஜோடியாக சந்தியா நடிக்க டேனியல் பாலாஜி, கீர்த்திசாவ்லா, வினோதினி, சுவாதி, 'கல்யாணமாலை' மோகன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லிங்குசாமி இயக்கிய 'ஆனந்தம்' முதல் 'பீமா' வரை இணை இயக்குனராக பணிபுரிந்த பி.வி.ரவி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

காதலுக்கு எதிர்ப்பே இல்லாம இருந்தா எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? காதலின் அழுத்தம் எப்படியிருக்கும்? பொதுவா குடும்பத்தை காதலர்கள் நேசிப்பதுண்டு. இங்கு ஒரு குடும்பமே இந்த காதலை காதல் செய்கிறார்கள் என்பதை மிக எளிமையான முறையில் அனைவரையும் கவரும் விதத்தில் கதையை அமைத்துள்ளேன் என்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் உதவியாளர் கே.குணசேகரன் ஒளிப்பதிவாளராக உயர்வு பெறுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சென்னையில் நடைபெறும். இப்படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இசை - வித்யாசாகர்
ஸ்டண்ட் - கனல் கண்ணன்
பாடல்கள் - பா.விஜய், நா.முத்துக்குமார், யுகபாரதி, நெல்லை ஜெயந்தா
எடிட்டிங் - கே.மோகன்குமார்
கலை - சஞ்சய்கரண்
தயாரிப்பு மேற்பார்வை - நிர்மல்
நிர்வாக தயாரிப்பு - நா.சுரேஷ்குமார்
தயாரிப்பு - சீத.ஷெண்பககுமார்

Share this Story:

Follow Webdunia tamil