அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட நேரம் பத்து மணி பத்து நிமிடம். அதை நினைவுபடுத்தும் விதமாகத் தான் கடிகாரங்களில் உலகம் முழுவதும் இன்றளவும் 10 மணி 10 நிமிடத்தை குறிக்கும் விதமாக அமைத்து விற்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தியன் டிரீம் மேக்கர்ஸ் என்ற நிறுவனம் "பத்து பத்து" (10.10) என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி இருக்கும் இதில் நடிக்க நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னணி நட்சத்திரங்களுடன் புதுமுகங்களும் நடிக்க இருக்கிறார்கள்.
கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்காவியமாக உருவாக இதன் தயாரிப்பு வடிவமைப்பை கணபதி சுப்பிரமணியம் கவனிக்கிறார். கேமராவை கணேஷ் கையாள, ஜெயக்குமார் படத்தொகுப்பை கவனிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் எல். வைத்யநாதனின் மகன் கணேஷ் வைத்யநாதன் இசையமைக்கிறார்.
ஜி. ராஜேஷ்வரி ஞானசம்பந்தம் தயாரிக்க புதியவரான சத்யன் கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல முன்னணி இயக்குநர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றியவர் இவர்.