பிக்பாக்கெட் - ராபர்ட் ப்ரெஸ்ஸனின் குற்றமும் தண்டனையும்
, சனி, 22 மார்ச் 2014 (13:28 IST)
1959
ல் பிக்பாக்கெட் வெளியானது. மிசெல் என்ற பிக்பாக்கெட்காரனின் இலக்கில்லாத வாழ்க்கை ஜோன் என்ற அவன் மீது அன்பு கொண்ட உள்ளத்தை கண்டடைவதுதான் கதை.
குதிரை ரேஸ் நடக்கும் இடத்தில் மிசெல் ஒரு பெண்ணின் பணத்தை திருடுகிறான். யாரும் பார்க்கவில்லை. அந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறுகிறவனை போலீஸ் கைது செய்கிறது. அவன் திருடியதுக்கு எந்த சாட்சியமும் இல்லை. பணம் வைத்திருந்ததற்காக அவன் மீது வழக்குப் பதிவு செய்ய இயலாது. மிசெல் விடுவிக்கப்படுகிறான். போலீஸ் அவனை தொடர்ந்து கண்காணிக்கிறது.பிக்பாக்கெட்டை தொழிலாக செய்யும் சிலருடன் மிசெல் சேர்கிறான். மக்கள் அதிகம் சங்கமிக்கும் இடங்களில் அவர்கள் கூட்டாக திருடுகிறார்கள்.ஒருநாள் பணத்துடன் தனது அம்மாவைப் பார்க்க மிசெல் செல்கிறான். பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம் பெண் ஜோன் அவனை வீட்டிற்குள் அம்மாவைப் பார்க்க அழைக்கிறாள். அதனை மறுத்து அம்மாவிடம் தரும்படி சிறிது பணத்தை தந்து அங்கிருந்து சென்றுவிடுகிறான். ஜோனுக்கும் மிசெலின் நண்பனுக்கும் இடையில் நட்பு உருவாகிறது.