பாலுமகேந்திரா நினைவலைகள்: இளையராஜாவை தவிர்த்து ரஹ்மானை தேர்வு செய்த பாலுமகேந்திரா
, சனி, 15 பிப்ரவரி 2014 (11:12 IST)
பாலுமகேந்திரா மறைந்துவிட்டார். மறைந்தவரைப் பற்றி பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பதில் எல்லோருக்குமே ஆர்வம். சன், கலைஞர், ஜெயா, விஜய்... எல்லா சேனல்களிலும் வேறு செய்திகள், நிகழ்ச்சிகள். செய்தி சேனலில் மட்டும் சில நொடிகள் பாலுமகேந்திராவை நினைவுகூர்ந்தார்கள்.
அப்படியே மலையாளம் பக்கம் வந்தால் டிடி மலையாள செய்தியில் பாலுமகேந்திரா குறித்த செய்தித் தொகுப்பு. மலையாளத்தில் ராமு காரியத், சேதுமாதவன், பரதன் போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புனே திரைப்பட கல்லுhரியில் கோல்ட் மெடலுடன் வெளிவந்த இளைஞர் பாலுமகேந்திராவை அழைத்து முதல்பட வாய்ப்பு தந்தவர் தேசிய விருது பெற்ற செம்மீனை இயக்கிய ராமு காரியத். படம் நெல்லு. அதன் பிறகு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.ஓளங்கள், ஊமக்குயில், யாத்ரா என்று மூன்று படங்களை மலையாளத்தில் பாலுமகேந்திரா இயக்கினார். மலையாளத்தைப் பொறுத்தவரை பாலுமகேந்திராவின் பங்களிப்பு இத்துடன் முடிகிறது. அவர் கடைசியாக இயக்கிய யாத்ரா வெளிவந்தது 1985 ல். அதன் பிறகு பத்து தமிழ்ப் படங்களை பாலுமகேந்திரா இயக்கினார்.
ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இயங்கிய கலைஞனை குறித்து விரிவான செய்தித் தொகுப்பை டிடி மலையாளம் ஒளிபரப்பியது. அப்படியே வந்தால் இன்னொரு மலையாளச் சேனலில் பாலுமகேந்திராவின் பேட்டி. பழையதுதான். ஷேnபா குறித்த கேள்வியில் பாலுமகேந்திராவிடம் தடுமாற்றம் தெரிந்தது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். ஷேnபாவின் பிரிவால் தான் அனுபவப்பட்ட வலியின் ஒருதுளிதான் மூன்றாம் பிறையின் கிளைமாக்ஸ் என்றும் ஷேnபாவின் நினைவுக்காக எடுத்ததுதான் அப்படம் எனவும் தெரிவித்தார்.