Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செய்யாத தவறுக்குத் தண்டனையா?-ஆர்.கே.செல்வமணி

Advertiesment
செய்யாத தவறுக்குத் தண்டனையா?-ஆர்.கே.செல்வமணி

Webdunia

பெரிய பரபரப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் "குற்றப் பத்திரிகை" தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் தடைகளைச் சந்தித்த இப்படம், அண்மையில் வெளியாகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகள் போராடிய பின் நீதிமன்றமே தலையிட்டு வெளியிட அனுமதித்தது விட்டது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இந்தப் பட அனுபவம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதை கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவாலாக சோதனையாவே நான் நினைக்கிறேன். ஒரு படைப்பாளி தன் கருத்தைச் சொல்ல நம் நாட்டில் எவ்வளவு உரிமை இருக்கிறது? எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது என்பதற்கு இந்தப் பட அனுபவமே சாட்சி என்று கூறலாம். ஏனென்றால் அவ்வளவு போராட்டங்களைச் சந்தித்தேன்.

உங்கள் கருத்து சட்டபூர்வமானதாக இருக்கிறதா..?

படம் எப்படி இருக்கிறது. அதில் என்னென்ன சர்ச்சைகள் இருக்கின்றன. யார் யார் பற்றி என்ன சொல்லியிருக்கிறோம் என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை. யாருக்கும் அக்கறையில்லை. பொறுமையும் இல்லை. அவர்களாகவே யீசந டிஉஉரயீநைன iனே ஆக.. இதில் இப்படி இருக்கும். இது இன்னார் சம்பந்தப்பட்ட கதை. இன்னாருக்குஆதரவாக இருக்கும் என்கிற முடிவெடுத்துக் கொண்டார்கள். படத்தையே பார்க்காமல் நிராகரித்தார்கள். காட்சிகளை வெட்டுங்கள் படத்தையே தடை செய்யுங்கள் பரவாயில்லை. ஆனால் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுச் செய்யுங்கள் என்று போராடினோம். யாரும் கேட்கவில்லை. கண்மூடித் தனமாக நிராகரித்தார்கள். எக்சிக்யூடிவ் கமிட்டியிலிருந்து ரிவைசிங் கமிட்டி இப்படி ஆளாளுக்கு இழுத்து அடித்தார்கள். இப்படி இழுத்து தாமதமாக்கி பதினான்கு ஆண்டுகள் போய்விட்டன.

ராஜீவ் கொலை சம்பவம் தான் உங்கள் மூலக்கதையில் இருந்ததா?

நான் "புலன் விசாரணை" இயக்கினேன் மாநில அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது. "கேப்டன் பிரபாகரன்" எடுத்தேன். அகில இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. இரண்டிலும் பின்னணியில உண்மைச் சம்பவம் இருந்தது. அதுபோல ராஜீவ் கொலை சம்பவத்தை எடுத்தால் அகில உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று நினைத்தோம். என் சீனியருக்கு அதாவது ரவியாதவுக்கு ஒரு படம் பிண்ணுவது என்று முடிவெடுத்தபின் ஒரு கதை தயார் செய்தோம். அதில் ஒரு அரசியல் தலைவரை குண்டு வைத்து தீவிரவாதிகள் சொல்வார்கள். இன்னொரு தலைவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்து செயல்படுவார்கள். இந்தச் சதியை ஹீரோவான போலீஸஅபீசர் தடுத்து நிறுத்திக் காப்பாற்றுவதுதான் கதை. இது "கேப்டன் பிரபாகரன்" படம் முடிந்து ரெடியான ஐடியா. அதன் பிறகு சில நாட்களில் ராஜீவ் கொலை செய்யப்பட்டார். பிறகு அதையே தளமாக அமைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மாற்றினோம். அது இந்த அளவுக்குப் போகும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சென்சாரில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தது?

நான் முன்பு சொன்ன மாதிரி நல்லதா கெட்டதா என்று பார்க்காமல் படம் வெளிவரக்கூடாது என்றே முடிவாக இருந்தார்கள். நீதிமன்றம் சென்றால்கூட வெளியிடலாம் என்று ஒரு கோர்ட் சொல்கிறது. வெளியிட வேண்டாம் என்று இன்னொரு கோர்ட் சொல்கிறது. ஒரே நாடு. ஒரே அரசியல் சட்டம். இரண்டு வேறு தீர்ப்புகள். இந்தப் படம் யாரைக் குற்றம் சாட்டுகிறது யாரைப் புண்படுத்துகிறது. யாரை அவமானப்படுத்துகிறது யாராவது சொல்ல முடியுமா?

91ல் பூஜை போட்டோம். 92ல் படத்தை முடித்து 94ல் டில்லி டிரிப்யூனலில் சர்பிகேட் வாங்கினோம். இருந்தாலும் வெளியிட முடியவில்லை. கொடுத்த சர்டிபிகேட்டை திரும்பப் பெற வேண்டும் என்று பிரச்சினை செய்தார்கள்.

இதில் குறிப்பாக அரசியல் கட்சிகள், தலைவர்கள் தலையீடு இருந்ததா?

குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாது. அவரவர் ஒவ்வொன்றை மனதில் நினைத்துக் கொண்டு இடையூறு செய்தார்கள். ஆனால் நான் யாரையும் குறிப்பிட்டு எதுவும் குறையோ-புகாரோ கூறவில்லை. கடைசியில் படத்தைப் பார்த்த ஜட்ஜ் கேட்டார்.. அப்படி எதுவும் படத்தில் இல்லையே என்றார். எங்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைத்து இருக்கிறது. இந்தப் படம் நீதிமன்றனத்தின் மூலம் தான் வெளியே வந்திருக்கிறது.

இந்தத் தாமத காலம் பற்றி என்ன உணர்கிறீர்கள்?

எடுத்த ஒரு படம் பதினைந்தாவது வருஷம் ரிலீசாவது என்பது பெரும் கொடுமை. இதில் நடித்த சிலர் இன்று பீல்டில் இல்லை. இது ரோஜாவுக்கு இரண்டாவது படம். இன்று ரோஜா 150 படம் முடித்து இரண்டு குரந்தைக்குத் தாயாகிவிட்ட ஒருவர். இப்படிப் பல மாற்றங்கள். ஆனால் இத்தனை காலம் நானும் தயாரிப்பாளரும் பட்ட மனக்கஷ்டங்கள். மன உளைச்சல்கள். அதை எழுதிட முடியுமா.. சொல்லி விளக்க முடியுமா? ஆறாண்டு வரை போராடினேன். அதன் பிறகு என்னால முடியலை ரவி நீங்க பாலோ பண்ணுங்கன்னு சொல்லிவிட்டேன். போராடி அழுது அலுத்துவிட்டேன்.

இப்போது நிம்மதி தானே?

இப்போது படம் வந்துவிட்டது. வெளியிட அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் போனது எல்லாம் வந்துவிடுமா? யாரையாவது குற்றம் சாட்டிவிட்டு கஞ்சா வைத்து கேஸபோட்டு குற்றவாளியாக்கி பின் விடுதலை செய்து நல்லவன் என்று கூறினால் சரியாகிவிடுமா? ஒரு வாலிபப் பெண்ணை தவறானவர் என்று ஊரே தூற்றிவிட்டு பிறகு அப்படியில்லை என்று சான்றிதழ் தந்தால் சரியாகி விடுமா.. இழந்த மானம்.. போன மரியாதை மீண்டும் கிடைக்குமா.. அடைந்த அவமானத்துக்கு என்ன பரிகாரம்? இப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். இழந்த 14 வருஷத்தை இவர்கள், திருப்பிக் கொடுத்து விடுவார்களா?

படத்தின் சிறப்பு என்று எதைக் கூறுவீர்கள்?

படத்தில் பேசப்படும்படி சிறப்பாக அமைந்த காட்சிகளை எல்லாம் வெட்டிவிட்டார்கள். அப்படி வெட்டப்பட்ட விஷயங்களை அனுமதித்து இருந்தால் இந்தப்படம். சரித்திரம் படைக்கும் படமாக இருந்திருக்கும். ஆனால் செய்யாத தவறுக்கு 14 ஆண்டு தண்டனையை நாங்கள் அனுபவித்து தவித்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு என்ன நீதி?

Share this Story:

Follow Webdunia tamil