Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காய்க்கிற மரம் தான் கல்லடி படும்! -சிம்பு

காய்க்கிற மரம் தான் கல்லடி படும்! -சிம்பு

Webdunia

சிம்பு என்றாலே வம்புதானா.. அவர் அறிமுகமான காலத்திருந்தே அவரைச் சுற்றி சர்ச்சைகள் கிசுகிசுக்கள். சிம்புவை ஒரு பக்கம் "மன்மதனாகவும் இன்னொருரு பக்கம் வல்லவனாகவும் சித்தரித்துக் கொண்டு வருகின்றன செய்திகள்."

நிஜத்தில் சிம்பு யார்?

ஒரு படம் முடிந்ததும் வெளிநாட்டு ட்ரிப் அடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் சிம்பு "வல்லவன்" முடிந்து அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். தோற்றத்தில் அமெரிக்க வாசம்.

நடிப்பது இயக்குவது எது எத்தனை படம் என்கிற கணக்கு ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

இந்த வருஷம் நிறைய படங்கள்ல நடிக்கணும்னு இருக்கேன். நாலு படமாவது நடிக்க ஆசை. ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்றதா திட்டம் இருக்கு. டைரக்ஷனுக்கு நேரம் நிறைய தேவைப்படுது. நடிக்கிற படங்களையும் குறைச்சுக்க வேண்டியிருக்கு. அதனால இந்த வருஷம் நடிப்புக்கு முக்கியத்துவம் தரலாம்னு இருக்கேன். இந்த ஒரு வருஷன் இப்படியே போகட்டும். அடுத்ததா டைரக்ஷன். இதுதான் என் திட்டம்.

நீங்கள் அவசரமாக அமெரிக்கா போனதில்ல ஏதாவது காரணம் இருக்கிறதா?

ஒவ்வொரு படம் முடிஞ்சதும் வெளிநாடு போவதை என் வழக்கமா வச்சிருக்கேன். இதுதான் யதார்த்தம். உண்மை. "கோவில்" முடிச்ச பிறகு லண்டன் போனேன். "மன்மதன்" முடிச்சதும் சிங்கப்பூர், மலேசியா போய்ட்டு வந்தேன். வல்லவனுக்குப் பிறகு அதேமாதிரி அமெரிக்கா போய்ட்டு வந்தேன். இதனால் பின்னணியில் எந்தக் காரணமும் கிடையாது. கஷ்டப்பட்டு உழைச்ச பிறகு தனிமையும் உற்சாகமும் தேவைப்படுது. அதுக்கு இப்படி வெளி நாட்டு ட்ரிப் உதவுது. சினிமாவை விட்டு விலகி நின்று யோசிக்க சந்தர்ப்பம் கிடைச்ச மாதிரியும் இருக்கு. நம்மோட நிறை குறைகளை அலசி ஆராய்ஞ்ச மாதிரியும் இருக்கும்.

தனுஷுக்கும் உங்களுக்கும் அப்படி என்ன புகைச்சல்?

பொறி கேசட் ரிலீஸபங்ஷன்ல தனுஷ் பேசியிருந்ததை அமெரிக்காவிலிருந்து வந்ததும் படிச்சேன். ரொம்ப சந்தோஷப்பட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி எங்களைப் பற்றி பத்திரியாக உள்ள ஏதேதோ எழுதியிருந்தாங்க. அதனால நாங்க பேச முடியாத சூழ்நிலை. ஆனா "வல்லவன்" படத்துக்கு முன்னாடி தற்செயலா ரெண்டு பேரும் சந்திக்கிற வாய்ப்பு வந்திச்சு. அப்ப பேசிக்கிட்டோம். நமக்குள்ள ஒண்ணுமில்லை. பத்திரிகைகள் தான் ஏதோ இருக்கிறதா சொல்றாங்கன்னு பேசிக்கிட்டோம். அப்புறம் அடிக்கடி பேசிக்குவோம். வல்லவன் படம் பார்த்துட்டு தனுஷ் போன் பண்ணினார். "திருவிளையாடல்" நல்லா இருக்குன்னு நான் சொன்னேன். இப்படி எங்களுக்குள் நல்ல உறவு இருக்குது. புகைச்சல் இல்லை.

தனுஷ்-சிம்பு என்கிற போட்டியை நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்களா?

எங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது உண்மை. தனுஷின் பையனுக்கு "யாத்ரா"ன்னு பெயர் வச்சிருக்கிறது நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கேன். எங்களுக்குள் நல்ல நட்புறவு இருக்கத்தான் செய்யுது. அதனால எங்களுக்குள் போட்டி இல்லைன்னு சொல்ல முடியாது. சினிமாவில் தனுஷ்-சிம்புங்கிற போட்டி இருக்கத்தான் செய்யுது. இதில் பொறாமை இல்லை. போட்டி மட்டும் உண்டு. அது ஆரோக்கியமான போட்டி.

சிம்பு-நயன்தாரா விஷயத்தில் என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லையே..

நான் அமெரிக்கா புறப்படறதுக்கு முன்னாடி எங்களுக்கு அவகாசம் வேணும். பாடம் தேவைப்படுதுன்னு.. டைம்தான் எதையும் முடிவு செய்யும்னு சொல்லிட்டுப் பேறேன். ப்ரண்டலியாத்தான்.. ரெஸ்ட் எடுக்க வெளிநாடு போனேன். கொஞ்சம் இடைவெளி. நேர்ல பார்க்க முடியாது. சந்திக்க வாய்ப்பும் இல்லைன்னு சொல்லிட்டுத்தான் போறேன். அந்த இடைவெளியில என்ன ஆச்சுன்னு தெரியலை. அவங்களோட ஸ்டேட்மெண்ட்டை பத்திரிகைல, வெப்சைட்ல படிச்சுத் தெரிஞ்சுக் கிட்டேன்.

இதில் உங்களுக்கு வருத்தமோ அதிர்ச்சியோ உண்டா..?

பின்னே சந்தோஷமாவா இருக்கும்.ப்ரண்ட்ஷிப்ல இப்படி ஒரு பிரேக் வர்றப்போ அதிர்ச்சியாத்தான் இருந்திச்சு. சுலபமா மீள முடியலை. அவங்களுக்கும் வேலை இருக்கு. எடைக்கும் வேலை இருக்கு. அதனால இது கல்பட்டு வராதுன்னு எனக்கு முதலிலேயே மனசுல பட்டுச்சு. இப்ப நாங்க எங்க வேளையைப் பார்க்கிறோம். இதனால விரோதம் பகை எதுவும் இல்லை.

உங்கள் அப்பா இந்த விஷயத்தில்ல உங்களுக்கு ஆதரவாக இருந்தும்.. எப்படி இப்படி பிரியும்படி ஆகிவிட்டது..?

இப்ப என்ன சொல்றது. எல்லாம் டைம்தான் கூட இருக்கிறது எல்லாம் ஒரு நாள் நம்மைவிட்டு விலகி.. போகத்தான் செய்யும். இது எனக்கும் புரிஞ்சிருக்கு. இந்த இருப்பத்தியாரு வயசுல நான் நிறைய அடிபட்டிருக்கேன். இப்ப இருக்கிற பணம், புகழ், பெயர் நாளைக்கு இருக்காது. இதுதான் வாழ்க்கை. இதுதான் யதார்த்தம். எங்கப்பாவுக்கு நயன்தாரான்னு இல்லை. நான் யாரைக் காதலிச்சாலும் ஒகேம்பார். எங்கிருந்தாலும் அவங்க சந்தோஷமா இருக்கட்டும். அதுதான் இப்போ சொல்ல முடியும்.

எப்போதும் உங்களைப் பற்றி சர்ச்சைகள் கிசுகிசுக்கள். வம்புகள்... இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எவ்வளவு நெகடிவா வந்தாலும் கூட நான் அதைப் பாசிடிவா எடுத்துக்க ஆரம்பிச்சிட்டேன். நாம் கவனிக்கப்படற ஆளா இருக்கோம்னு எடுத்துக்கறேன். நாம யாரையாவது இன்ஸ்பயர் பண்ணினாலும் சரி டிஸ்டர்ப் பண்ணினாலும் சரி நம்மகிட்டே ஏதோ இருக்குன்னுதான் அர்த்தம். ஏன்னா காய்க்கிற மரம் தான் கல்லடிபடும்.

Share this Story:

Follow Webdunia tamil