Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யாராய் - எண்பது கிலோ தா‌ஜ்மஹால்?

Advertiesment
ஐஸ்வர்யாராய் குழந்தை
, செவ்வாய், 8 மே 2012 (18:04 IST)
FILE
ஐஸ்வர்யாராய்தான் இப்போது மீடியாக்களின் மையம். குழந்தை பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் குண்டாகிவிட்டார், அவர் எப்படி குண்டாகலாம் என்று மீடியாக்களும், ரசிகர்களும் எகிறி அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் உடம்பு, அவர் குண்டாவார், ஒல்லியாவார்... உங்களுக்கென்னடா என்று கேட்டாலும் உறைக்கவில்லை. ஐஸ்வர்யாராய் ஏதோ தா‌ஜ்மஹால், குதுப்பினார் மாதி‌ி இந்தியாவின் பிராப்பர்ட்டி போலவே நினைக்கிறார்கள். பாவம் அபிஷேக்பச்சன்.

ஜெனிலியாவின் திருமணத்தில் கலந்து கொள்ள ஐஸ்வர்யாராய் வந்த போது அவரைப் பார்த்தவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். அப்படியொரு குண்டு. அதற்கு சில நாட்கள் கழித்து முகேஷ் அம்பானி அளித்த விருந்தில் கலந்து கொண்டார் ஐஸ். அப்போது எடுத்த ஃபோட்டோக்கள் சில எப்படியோ லீக்காகி விட்டது. அந்தப் போட்டோக்களில் ஐம்பது கிலோ தா‌ஜ்மஹால் பெருத்து எண்பது கிலோவாக காட்சிளித்தது. அதைப் பார்த்துதான் இந்த குய்யோ முய்யோ.

குழந்தை பெற்றுக் கொண்டால் அப்படிதாம்பா குண்டாகும். கொஞ்ச நாளில் ச‌ரியாகிவிடும் என ஐஸின் நலம்விரும்பிகள் ஒருபக்கம் புகை போடுகிறார்கள். அதெல்லாம் கிடையாது. ஃபுட்பால் பிளேயர் பெக்காமின் மனைவியை பாரு, குழந்தை பெற்ற மூன்றாவது வாரமே சைஸ் ‌ஸீரோவுக்கு வந்துவிட்டார். ஐஸ் குழந்தை பெற்று அது ஆகப்போவுதே அஞ்சு வாரம் என்று ரசிக தரப்பில் சிலர் நீட்டி முழக்குகிறார்கள்.

ஐயோ பாவம் ஐஸ்.

Share this Story:

Follow Webdunia tamil