சல்மான்கானின் ரெடி, 85லிருந்து 90 கோடிகள் வசூலிக்கும் என்று பாலிவுட்டில் கணித்திருந்தனர். இந்தக் கணக்கு இரண்டாவது வாரத்தில் நொறுங்கியிருக்கிறது.
சென்ற வார இறுதி மூன்று தினங்களில் மட்டும் ரெடி எட்டு கோடிகள் வசூலித்துள்ளது. வெள்ளிக்கிழமை வசூல் 1.75 கோடிகள். சனிக்கிழமை 2.25 கோடிகள். ஞாயிற்றுக்கிழமை 4 கோடிகள். இதுவரை இப்படம் 108.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.
சல்மான்கானின் வான்டட், தபாங் படங்கள் போலவே இந்தப் படமும் மிகப் பெரிய வசூலை அளித்துள்ளது. ஓபனிங் வீக் எண்டைப் பொறுத்தவரை தபாங் படத்துக்கு அடுத்த இடத்தில் ரெடி உள்ளது. 3இடியட்ஸை இப்படம் சுலபமாக பின்தள்ளியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சல்மான்கானின் இந்தத் தொடர் வெற்றி அவரை பாலிவுட்டின் கலெக்சன் கிங் ஆக்கியுள்ளது.