அமீர்கான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் டெல்லி பெல்லி. அவரின் மற்றப் படங்கள் போலன்றி செக்ஸை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது.
டெல்லி பெல்லி கண்டிப்பாக வயது வந்த பார்வையாளர்களுக்கு மட்டுமேயான படம் என்று ஆரம்பம் முதலே அமீர்கான் சொல்லி வருகிறார். படத்தின் முதல் ட்ரெய்லரும் இதனை உறுதி செய்துள்ளது. தற்போது சென்சார்.
டெல்லி பெல்லியைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் படத்துக்கு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்த ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏற்கனவே இதனை எதிர்பார்த்ததால் படக்குழுவினருக்கு இதில் ஆச்சரியமேதுமில்லை. முக்கியமான விஷயம், படத்தின் சிறு பகுதியைகூட தணிக்கைக் குழு எடிட் செய்யவில்லை.
ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இம்ரான்கான், வீர் தாஸ், குணால் ராய் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.