இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவெல் என்று பெயர் வைத்து இந்திப் படங்களுக்கு மட்டும் விருது வழங்கும் பணக்கார குறுங்குழு ஒன்று எந்த வெட்கமும் இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த ஆபாச குழுதான் சென்ற வருடம் இனப்படுகொலை நடந்த இலங்கையில் விழா நடத்தியது. தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்த விழாவின் விளம்பரப் பொறுப்பேற்று நம்மையெல்லாம் வெறுப்பேற்றியவர் சல்மான்கான்.
இந்த மசில்மேன் இந்த வருடம் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். பாடிகார்ட் படத்தின் படப்பிடிப்பு இருப்பதால் கலந்துகொள்ள முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் உண்மைக் காரணம் வேறு. 7 வருடங்களுக்குப் பிறகு இந்த வருட ஐஃபா விழாவில் ஷாருக்கான் கலந்து கொள்கிறார். அவரது ஆட்டமும் விழாவில் உண்டு. ஷாருக் கலந்து கொள்வதால் சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம் தனக்கு ஃபோகஸ் கிடைக்காது என்றே விழாவை சல்மான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
பல்லாயிரம் உயிர்களுக்கு இல்லாத மதிப்பை சல்மான் தனது ஈகோவுக்கு அளித்திருக்கிறார். இவர்களை எப்படி கலைஞர்கள் என்று அழைப்பது?