ஆஸ்கர் விருதை கைப்பற்றும் என அனைவராலும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் ஸ்லம்டாக் மில்லியனர், எந்த இந்திய படமும் எதிர்கொள்ளாத சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
படத்தின் தலைப்பில் உள்ள 'நாய்' சர்ச்சையின் மையம். பாட்னாவில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். “நாய் எனக்கு பிடிக்காத வார்த்தை.” இது ஷாருக்கின் கமெண்ட்.
அமிதாப் கொஞ்சம் காரம். ஜெய்ப்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்லம்டாக் மில்லியனர் பற்றி கேட்டனர். என்ன கோபமோ? பொரிந்து தள்ளினார்.
இங்கிலாந்துக்காரன் எடுத்ததால் படத்துக்கு விருது கொடுக்கிறார்கள். எடுத்தது இந்தியன் என்றால் கண்டுக்க மாட்டார்கள். ஆஸ்கர் என்பது அமெரிக்கா தனது படங்களுக்கு கொடுக்கும் விருது. அதற்கு நாம் ஏன் ஆசைப்படுகிறோமோ தெரியவில்லை. தேசிய விருதுதான் நமக்கு பெரிய விருது. ஏ.ஆர். ரஹ்மான் உள்பட ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
அமிதாபை போல் நாலு பேர் சொன்னாலாவது இந்தியர்களின் ஆஸ்கர் பிரமிப்பு குறைகிறதா, பார்ப்போம்.