ஜெயிலிலிருந்து வந்த சஞ்சய்தத்துக்கு சென்ற வாரம் பிறந்த நாள். பட்டாசு வெடித்து கேக் வெட்டியிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு படப்பிடிப்பு என்று கிளம்பிவிட்டார்.
சஞ்சய் தத்தின் ரசிகர்களுக்கு இதில் ஏமாற்றம்தான். ஆனால் அதற்கு அவர் கூறிய விளக்கம் இருக்கிறதே ரசிகர்களுக்கு இனிப்பு சாப்பிட்ட எபெக்ட் கிடைத்திருக்கும்.
பெங்களூரு, அகமதாபாத் குண்டு வெடிப்பால் நாடே கலக்கத்தில் இருக்கும் நேரத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது சரியில்லை என்று கூறியிருக்கிறார். சொன்னபடி பிறந்த நாளுக்கு முதல் நாள் தென்னாப்பிரிக்காவுக்கு சஞ்சய்தத் ஜூட். அங்கு புதிய படத்தின் படப்புடிப்பு.
ஏ.கே. 47 வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டவர் தீவிரவாதத்திற்கு எதிராக பிறந்த நாள் கொண்டாடட்டத்தையே ரத்து செய்துள்ளார்.
முன்னாபாய் நீங்க எங்கேயோ போயிட்டிங்க!