கடைசியில் சச்சினையும் சினிமாவுக்குள் இழுத்து விட்டுள்ளனர். மாஸ்டர் பேட்ஸ்மேனை விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம்.
மும்பையின் அடையாளங்களில் ஒன்று சித்தி விநாயகர் ஆலயம். பக்தி ஸ்பாட் மட்டுமின்றி மும்பை வருகிறவர்கள் தவறவிடாத டூரிஸ்ட் ஸ்பாட்டும்கூட சித்தி விநாயகரின் வி.ஐ.பி. பக்தர்களில் சச்சினம் ஒருவர்.
சித்தி விநாயகரின் மகிமையை சொல்லும் படமொன்றை ஆலயத்தின் அறக்கட்டளை தயாரிக்கிறது. விக்னஹர்த ஸ்ரீ சித்தி விநாயக் என்ற அந்தப் படத்தில் சச்சின் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த தகவலை அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேகர் தெரிவித்தார்.
இந்தப் படத்துக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் அமிதாப்பச்சன். படத்தில் வரும் முக்கிய கேரக்டர் ஒன்றுக்கு அமிதாப் டப்பிங் பேசுகிறாராம்.
கவுரவ வேடத்தில் சச்சின்.... அமிதாப்பச்சன் டப்பிங் குரல். வல்லமை நிறைந்த சித்தி விநாயகர்தான்!