இந்திப் படவுலகில் வாரிசுகளுக்கே சிவப்பு கம்பளம். வாரிசு இல்லாமல் அதன் இரும்புச் சுவரை தாண்ட வேண்டுமென்றால், உலக அழகியாக இருக்க வேண்டும். இல்லை மாடல்! இந்த இரண்டும் இல்லையென்றால் அஷ்டலட்சுமியின் அனைத்து கடாட்சமும் பெற்றிருக்க வேண்டும்.
வாரிசு என்ற கோதாவில் புதிதாக நடிக்க வருகிறவர் நர்மதா. இவரை தெரியாவிட்டாலும் இவரது தந்தை இந்தியா முழுக்க பிரபலம். இன்னும் சஸ்பென்ஸ் வைப்பானேன். நடிகர் கோவிந்தாவின் மகள்தான் நர்மதா.
மணிரத்னத்தின் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் இந்த ஹீரோ. இது தவிர மீரா நாயரின் படம் உட்பட அரைடஜன் படங்கள் கைவசம் இருக்கிறது. தந்தையின் தொழில் மீது மகளுக்கு ஆர்வம். நடித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்.
நடிப்பு, நடனம் என சினிமாவுக்குத் தேவையான திறமைகளை வளர்க்க இந்த பாசக்கார தந்தை மகளுக்கு துணை நிற்கிறார். விரைவில் நர்மதாவை திரையில் பார்க்கலாம். அதற்கான நல்ல சப்ஜெக்டாக தேடி வருகிறார் கோவிந்தா.