ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அமீர்கான் நடித்திருக்கும் கஜினியே இந்தி படவுலகின் ஹாட் டாபிக். 2008ல் வெளியான எந்த இந்திப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அனைவரின் கவனமும் கஜினியில் குவிந்துள்ளது.
அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்திக்கு கஜினி ரிஸீசாக இருப்பதாக பேச்சு. இதே நாள் பாலிவுட்டில் அதிக பொருட் செலவில் தயாரான படமான 'ட்ரோனா' வும் வெளியாகிறது.
ட்ரோனா, சயின்ஸ் பிக் ஷன் படம். சூப்பர் ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். படம் முழுக்க கிராபிக்ஸ் இடம் பெறுகிறது. கடந்த டிசம்பரே முடிந்த படம் பத்து மாதங்கள் கழித்து அக்டோபர் மாதமே திரைக்கு வருகிறது. கிராபிக்ஸ் வேலைகள் முடிவதற்கே இந்த பத்து மாதங்கள்.
அக்டோபர் 2 கஜினி வெளியானால், ஓர் அதிரடி போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்!