பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக பேசப்பட்டவர் சுஷ்மிதா சென். உலக அழகி ராய் பாலிவுட், ஹாலிவுட் என பறந்து நடித்துக் கொண்டிருக்க, பிரஞ்ச அழகி சென், ஆளையே காணோம். எங்கே என்று விசாரித்தால் பல விந்தை செய்திகள்.
சுஷ்மிதா சென் ஜான்ஸி ராணியின் வாழ்க்கை வரலாறை சொல்லும் ஜான்ஸி கி ராணி படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குவதுடன் ஜான்ஸி ராணியாகவும் நடிக்கிறார்.
சென் இயக்கும் முதல் படம் இது. ஆர்வம் இருக்கும் அளவுக்கு தொழில் நுட்பம் தெரியவில்லையாம் பிரபஞ்ச அழகிக்கு. அதனால் தொழில் தெரிந்த ராபி கருவலை உடன் வைத்துள்ளார்.
இரண்டு படங்கள் இயக்கியிருக்கும் ராபியிடம் தனது தொழில் நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுகிறாராம் சென். இதனை ராபியும் சோர்வில்லாத உற்சாகத்துடன் செய்து வருகிறாராம்.
சென் போன்ற ஒரு நடிகை உடன் இருந்தால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்!