கவலையில் இருக்கிறார் கங்கனா ரனவத். கங்கனாவின் முன்னாள் காதலர், ஆதித்யா பஞ்சோலி வாரி இறைத் சேறுதான் சோகத்துக்கு காரணம்.
பஞ்சோலியின் நண்பர் பிளாட்டில் மூன்று வருடம் கங்கனாவும், பஞ்சோலியும் குடும்பம் நடத்தினர். கங்கனாவை காதலிப்பதற்காகவே, தனது மனைவியை விவாகரத்து செய்தார் பஞ்சோலி. கங்கனா வீடு கட்டவும், கங்கனாவின் தங்கைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் லட்சங்களை வாரி இறைத்ததும் இவரே.
சிறிது நாளாக இந்த ஜோடிக்குள் பிரிவு. காரணம் என்ன என்று மண்டை குடைந்தவர்களுக்கு பஞ்சோலியே அதிர்ச்சியான காரணத்தை தெரிவித்துள்ளார்.
கங்கனாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவர்களிடம் என்னிடம் 'பழகுவது' போலவே பழகுகிறார். சக நடிகருக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் பண்ணுகிறார் என பெரிய புகார் பட்டியலே வைத்துள்ளார் பஞ்சோலி.
இந்த விஷயம் சண்டையாகி கங்கனாவை அடித்துள்ளார் பஞ்சோலி. இதற்காகவே காத்திருந்தவர்போல காதலை 'கட்' செய்து விட்டார் கங்கனா.
தனது அந்தரங்கம் முன்னாள் காதலன் மூலம் முழுவதுமாக வெளிவந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் கங்கனா.