நாற்பது ஐம்பது நடிகர்களை வைத்து பேமிலி ட்ராமா எடுப்பதில் கரண் ஜோஹர் கில்லாடி. கரணைப் போலெல்லாம் நான்சென்ஸ் சினிமா தன்னால் எடுக்க முடியாது என்ற தொனியில் முன்பொருமுறை கூறினார் ராம்கோபால் வர்மா.
கரண் ஜோஹரிடம் இதுபற்றி கேட்டபோது, வர்மாவுக்கு என் படங்கள் மீது மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு.த இந்தியாவின் மிகச்சிறந்த பத்துப் படங்களில் வர்மாவின் சத்யாவும் ஒன்று என்றார்.
இந்த வார்த்தைகள் பொய்யில்லை என்பதை IIFA விழாவில் நிரூபித்தார் கரண். வர்மாவின் சர்க்கார் ராஜ் திரைப்படம் IIFA விழாவில் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் அதில் நடித்த அமிதாப்பச்சனின் காலை தொட்டு வணங்கினார் கரண். படத்தில் அமிதாப்பின் நடிப்பைப் பார்த்து நெகிழ்ந்து போதைன் வெளிப்பாடே இந்தப் பணிவு.
அமிதாப்பை இயக்கியவர் என்ற வகையில், கரண் ஜோஹரின் இந்த மரியாதையில் வர்மாவுக்கும் பங்கு உண்டு தானே!