ஷாகித் கபூரை காண நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அவரின் சிக்ஸ்பேக் அப்ஸ் உடம்புக்கு கன்னா பின்னா ரசிகைகள். ஆனால் அவரது இதயம் துள்ளுவதோ, பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பசர்லோக்கின் இசைக்கு.
Kismat Konnection படத்துக்காக டொரண்டோ சென்றிருந்தார் ஷாகித். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் டிம்பர் லோக்கின் ஓபன் ஸ்டோக் இசை நிகழ்ச்சி. விடுவாரா ஷாகித்?
யாம் பெறப்போகும் இன்பம் இவ்வையகமும் பெறட்டும் என மொத்த பட யூனிட்டுக்கும் சேர்த்து இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார்.
கரீனா கபூரை விட டிம்பர்லோக்கின் இசையை ஷாகித் அதிகம் காதலித்திருப்பார். அதனால்தான் கரீனா ஷாகித்துக்குள் பிரிவு என ஜோக் அடிக்கிறார்கள் பாலிவுட்டில்.
ஜோக் சிலவேளை நிஜமதாகக் கூட இருக்கலாம்!