மணப்பெண் மேக்கப் போடத் தயாராகி வருகிறார் ஷில்பா ஷெட்டி. இது எந்தப் படத்திற்காகவும் அல்ல. சொந்த நலத்திற்காக.
ஷில்பாவும் லண்டன் வாழ் இந்தியத் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவும் நட்பின் அடிப்படையில் பல காலமாகப் பழகி வருகிறார்கள். இருவருக்குள்ளும் காதலா என்ற கேள்வி எழுகிற போதெல்லாம், இது நூறு விழுக்காடு நட்பு என்று மூழ்காத பிரெண்ட்ஷிப் கப்பலுக்குள் ஏறிக்கொள்வார் ஷில்பா. எவ்வளவு நாள் பாவம் அந்தக் கப்பல் இவர்களைத் தாங்கும்.
பிரெண்ட்ஷிப் கப்பல் கவிழ உண்மை வெளி வந்திருக்கிறது. "நானும் ராஜ் குந்த்ராவும் ஒருவரை ஒருவர் நேசிப்பது உண்மைதான். இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். ஆனால், திருமணம் எப்போது என்பதை இப்போதே சொல்ல முடியாது" என்று திருவாய் மலர்ந்துள்ளார் ஷில்பா.
ஷில்பா ஷெட்டிக்கு இப்போது நாற்பது வயது இருக்குமா?