உடையில் ஒளிவு மறைவு இல்லாதது போலவே, மோனா சோப்ராவின் பேச்சிலும் மறைவுப் பிரதேசம் இல்லை. திரைப்படத்தில் நெருக்கமாக நடிக்கிறீர்களே உணர்ச்சிவசப்படுவீர்களா என்றொரு கேள்வி. படுக்கையறைக் காட்சியில் நடிப்பீர்களா என்று இன்னொரு கேள்வி.
இரண்டுக்கும் மோனா சொன்ன பதில் கேட்டுப் பலரும் கோமா நிலைக்கே போனதாகக் கேள்வி.
நெருக்கமான காட்சிகள் மோனாவிற்கு ஒரு பொருட்டே இல்லையாம். ஒரெயொரு முறை மட்டும் நெருக்கமான காட்சியின்போது உணர்ச்சிவசப்பட்டாராம். ஆனால் அது எந்த நடிகருடன் நடித்தபோது என்பதைக் கூற மறுத்துவிட்டார் மோனா.
இரண்டாவது கோள்விக்கான பதில், இன்னும் கூட ஒபன். எப்படி வேண்டுமானாலும் நடிப்பாராம். ஆனால் இயக்கநர் ஆஸ்கர் விருது வாங்கிய மார்ட்டின் ஸ்கார்கஸியாக இருக்க வேண்டுமாம்.
எங்காவது மோனாவின் புகைப்படத்தைப் பிரசுரித்து கீழே ஷெர்லின் சோப்ரா என்று போட்டிருந்தால் குழம்பாதீர்கள். மோனா தனது பெயரை ஷெர்லின் என்று மாற்றியுள்ளார். ஷெர்லின்தான் அவரது ஒரிஜினல் பெயராம்.